Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, நகைக்கடன் தள்ளுபடி…. அரசு அதிரடி….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார்.

இந்நிலையில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ரூ.300, நகை கடன் தள்ளுபடி மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |