சமையல் எண்ணெய் விலை அதிக அளவு உயர்ந்து உள்ள காரணத்தினால் இதன் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் உலகிலேயே அதிகப்படியான சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ஆயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 17.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. இந்த வரி குறைப்பு மூலமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு அதிகம். அதன்படி பாமாயில் மீதான அடிப்படை திருத்தப்பட்ட சுங்கவரி ஆனது 2022 மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.
இந்த புதிய விகிதம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பாமாயில் மீதான இறக்குமதி குறைக்கப்பட்டதால் உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் வரும் காலங்கள் பண்டிகை காலம் என்பதால் சமையல் எண்ணெய் தேவை அதிக அளவில் இருக்கும். தற்போது நாட்டில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விலை அதிகளவில் உள்ள நிலையில், விலை குறைப்பு இல்லத்தரசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.