தமிழகத்தில் திமுகவின் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000ரூ வழங்கப்படும் என்பது தான். பொருளாதார நெருக்கடி காரணமாக முக்கிய சில வாக்குறுதிகள் உடனே நிறைவேற்றப்படவில்லை. அதில் இந்த வாக்குறுதியும் ஒன்றாகும். எனினும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு இந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிடும். இவ்வாறு அமலுக்கு வந்தால் திமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்த வாக்குறுதியானது நிறைவேற்றப்படாமலே இருக்கிறது.
இந்த நிலையில் பால் வளத்துறை அமைச்சரான நாசர் இது தொடர்பாக பேசியுள்ளார். இதனிடையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆவின் பால் பண்னையில் நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை காரைக்குடி பால் பண்ணையின் மூலமாக குளிரூட்டப்பட்டு, பதப்படுத்தி 2 மாவட்ட நுகர்வோர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த ஆவின் பால் நிறுவனத்தில் அதனுடைய விரிவாக்கம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக தமிழக பால்வளத்துறை அமைச்சரான நாசர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அமைச்சர் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது “கடந்த காலங்களில் நடந்த ஊழல் குறித்து முன்னால் அமைச்சர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது முதல்வரின் தேர்தல் வாக்குறுதியாக இருக்கிறது. அந்த அடிப்படையில் ஆவினில் நடந்த முறைகேடு நியமனங்கள் குறித்தும், பணி நியமனங்களுக்காக ரூபாய் 3 கோடி வசூலித்தது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் பால் உற்பத்தியானது 36 லட்சம் லிட்டராக இருந்த நிலையில் தற்போது 41 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
இதேபோன்று கடந்த ஆட்சியில் ஆவின் பால் விற்பனை 26 லட்சம் லிட்டராக இருந்தது, தற்போது 28 லட்சம் லிட்டராக விற்பனை உயர்ந்துள்ளது. இதற்கிடையில் தோல், பட்டாசு தொழிற்சாலைகளில் தொடக்க பால் கூட்டறவு சங்கங்களுக்கு வழங்க பட்டாசு வாங்கியதிலும் ஊழல் மற்றும் வசூல் நடந்துள்ளது. முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் குவிந்துள்ளது என்று கூறினார். மேலும் பேசிய அவர் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் செயல்படுத்துவார். பிற திட்டங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைபடுத்துவதை போன்று அதையும் முதல்வர் முக.ஸ்டாலின் செயல்படுத்துவார்” என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.