தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பில்,அரசு ஊழியர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் கிடையாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்காது என கூறப்படுகிறது. இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.