சாணார்பட்டி அருகே உள்ள கைலாசப்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி நந்தினி(22). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நந்தினி நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் பரவிய தீயால் அவர் அபய குரல் எழுப்பியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து நந்தினி உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் அவர் தீயில் கருகினார் இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு திவிரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இது பற்றி சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories