திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரல்பட்டியில் சிவக்குமார் ( 40 ) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் . சிவகுமார் கூலித்தொழில் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிவகுமார் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த தற்கொலை குறித்து தாண்டிக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.