குஜராத் மாநிலத்தில் இரண்டு இளம் பெண்களை பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் ஒருவர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் நந்தர் பார் மாவட்டத்தில் விஷ்ணு நாயக் என்ற சாமியார் ஒருவர் வசித்து வருகிறார். அவரிடம் தனது குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் 6 குஜராத்தை சேர்ந்த இரண்டு பெண்களின் தந்தை ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த சாமியார், உங்களின் இரண்டு மகள்களுக்கும் பேய் பிடித்து இருப்பதால் தான் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வருகிறது என்றும், அவர்களுக்கு உடனடியாக பேயோட்டும் சடங்குகள் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி பேய் ஓட்டுவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் வசூல் செய்துள்ளார். சாமியாரின் பேச்சைக் கேட்ட அந்த தந்தை, தனது இரண்டு மகள்களையும் அழைத்துச் சென்று சாமியாரின் இருப்பிடத்தில் விட்டுச் சென்றார். அந்தப் பெண்களை சாமியார் பலமுறை கற்பழித்துள்ளார். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பெண்கள் இருவரும் கர்ப்பம் அடைந்தது அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பெண்களின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சாமியார் மற்றும் அவரின் இரண்டு உதவியாளர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.