Categories
அரசியல்

குடைச்சல் கொடுக்கும் திமுக நிர்வாகிகள்… கடுப்பில் முதல்வர் ஸ்டாலின் …. !!

சமீபகாலமாக அடிமட்ட பொறுப்பில் இருக்கும் திமுக நிர்வாகிகள் சிலர் பொதுமக்களை தாக்கிய கைதாவது, சாலையில் வாகனத்தை நிறுத்தி சண்டை போடுவது, குத்தாட்டம் போடுவது என்று செய்திகளில் சிக்குவது திமுகவுக்கும் முதல்வர் கட்டமைக்கும் இமேஜிக்கும் சிக்கலை உண்டாக்கும் என்கிற கருத்து அரசியல் விமர்சகர்களால் வைக்கப்படுகிறது.

இன்று சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு காணொளி கேலியுடன் விமர்சிக்கப்படுகிறது. அதில் கார் கதவைத் திறக்கிறார் கரை வேட்டி கட்டிய திமுக பிரமுகர். வயது 60க்கு மேல் இருக்கும். கார் கதவைத் திறக்கும்போதிறக்கும்போதே நா ரெடி நீங்க ரெடியா என்கிற குத்தாட்ட பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

வீடியோ எடுப்பதை கண்டு இன்னும் உற்சாகமாகி ஆடுகிறார். இந்த வீடியோவை எடுத்தவர் அதை வாட்ஸ் அப்பில் போட அது வைரலாகி ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் ஹார்லிக்ஸா மாறிவிட நான் ரெடி என்ன அப்படியே சாப்பிட நீங்க ரெடியா என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடியவர் ஷாஜகான். திண்டுக்கல் மாவட்ட பிரதிநிதி.

பழனி திமுக ஒன்றியத்தில் பொறுப்பில் இருக்கிறார். இவரது மனைவி பழனி திமுக சிவகிரிபட்டி ஊராட்சி 4-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் என்கிற தகவல் திமுக வட்டாரத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |