Categories
சினிமா தமிழ் சினிமா

‘ குடை பிடிப்பவர்களுக்கும் சேர்த்தே மழை பொழிகிறது’… ஜோ பைடனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலாஹாரிஸ் ஆகியோருக்கு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு உலக நாட்டு தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பது, “எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் நான் அதிபராக இருப்பேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.

அவரின் பெருந்தன்மைக்கு இதுவே மிகப்பெரிய சான்று. குடை பிடிப்பவர்களுக்கும் சேர்த்தே மழை பொழிகிறது. ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |