Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“குடோனில் இருந்த பொருட்ள்கள்” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடோனின்  பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடி கிரவுன் நகரில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கழனிவாசல் பகுதியில் மின்சார சாதனங்கள்  பழுது பார்க்கும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில்  சண்முகசுந்தரம்  வேலையை முடித்துவிட்டு பொருட்ள்களை அருகில் இருக்கும்  குடோனில் வைத்து பூட்டிவிட்டு  சென்றுள்ளார். இதனையடுத்து   திரும்பி வந்து பார்த்தபோது குடோனின்  கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது குடோனில் இருந்த மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சண்முகசுந்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடோனில் இருந்த பொருட்களை திருடியது அதே பகுதியை சேர்ந்த கரண்  என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர்  கரணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |