Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடோனில் திடீர் தீ விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு 4- ஆம் வீதியில் பழைய பிளாஸ்டிக் பாட்டில் பழைய இரும்பு பொருட்கள் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த சிலர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |