அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களிடம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் கூறி உள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா, வலையுடன் கூடிய இரும்பு பாதை, முழு உடல் பரிசோதனை மையம் ஆகியவைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த மையங்களை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் குட்கா சம்பந்தப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிப்பதற்கு சிபிஐ தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் உள்ள குட்கா வியாபாரிகளின் வீட்டில் டெல்லி வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் டைரி கிடைத்தது.
அந்த டைரியில் குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்வதற்காக அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பி.வி ரமணா, சி.வி பாஸ்கர், முன்னாள் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன், உளவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுப்பதாக எழுதி இருந்தது. அந்த டைரியில் இருக்கும் விவரங்களை டெல்லி சிபிஐ தமிழக அரசுக்கு அனுப்பி அமைச்சர்களிடமும், கமிஷனரிடமும் விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கடிதம் எழுதி அனுப்பியிருந்தது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன் காரணமாக குட்கா பணப்பரிமாற்றம் குறித்து அமைச்சர் களிடம்விசாரணை நடத்துவதற்கு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்