சேலம் மாவட்டத்தில் லாரியில் கடத்தி வந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியிலிருக்கும் காரைக்காடு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த இரண்டு மினி லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 71 மூட்டைகளில் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து லாரி டிரைவர்களை விசாரணை செய்த போது அவர்கள் ஆலங்குளத்தை சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்கள் கடத்தி வந்த குட்கா பொருட்களின் மதிப்பு 13 லட்சம் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.