நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் தூங்கும்போது பிரபல ஹீரோ செல்பி எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அசத்தியவர். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் இயக்குனர் செல்வராகவனுடன் ‘சாணி காயிதம்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் நடிகர் நிதினுடன் திரைப்படம் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் குட்டித் தூக்கம் போட்ட கீர்த்தியுடன் நடிகர் நிதின் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லுரி செல்பி எடுத்துள்ளனர். சேரில் அமர்ந்தபடி கண்களில்துணியை வைத்து மறைத்து தூங்கிக் கொண்டிருந்த கீர்த்தியின் அருகில் சத்தமில்லாமல் சென்று எடுத்த செல்பியை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.