Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டியை ஈன்ற காட்டு யானை…. தேயிலை தோட்டத்தில் குவிந்த பொதுமக்கள்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

தேயிலை தோட்டத்தில் காட்டு யானை குட்டியை ஈன்றதால் பொதுமக்கள் அங்கு செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் பாண்டியாறு அரசு தொழிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் பிளிறியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன குட்டியானை கூட்டத்திற்கு நடுவில் நின்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மற்ற காட்டு யானைகள் அங்கிருந்து சென்றது. இது குறித்து அறிந்த நாடுகாணி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் கூறும் போது குட்டியை யானை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லும் வரை பொதுமக்கள் அங்கு செல்லக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |