Categories
சினிமா

“குட்டி அதிசயம் வரவிருக்கிறது”…. பிரபல அஜித் பட நடிகர் சொன்ன ஹேப்பி நியூஸ்….. வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!

நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்து பிரபலமடைந்தவர் ஜான்கொக்கன். இதையடுத்து இவர் சார்பட்டா பரம்பரை, கேஜிஎப் 2 ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய தென் இந்திய படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான்கொக்கன் சென்ற 2019-ல் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினர் சமூகவலைதளங்களில் நெருக்கமான புகைப்படங்களையும், பல விதமான உடற்பயிற்சி செய்யும் போட்டோ, வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தனர். இந்த நிலையில் தம்பதியினருக்கு அடுத்த ஆண்டு குழந்தை பிறக்க இருக்கிறது. இது குறித்த தகவல்களை இருவருமே தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர். “குட்டி அதிசயம் வரவிருக்கிறது'” என தெரிவித்து பூஜா கர்ப்பமாக உள்ள போட்டோவை பகிர்ந்து தன் மகிழ்ச்சியை ஜான்கொக்கன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Categories

Tech |