Categories
சினிமா தமிழ் சினிமா

‘குட்டி பட்டாஸ்’ பாடல் செய்த அசத்தல் சாதனை… மகிழ்ச்சியுடன் அஸ்வின் வெளியிட்ட வீடியோ… இணையத்தில் வைரல்…!!!

குட்டி பட்டாஸ் அல்பம் பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அஸ்வின் . இவர் இதற்கு முன் ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார். மேலும் இவர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில்  சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனிடையே அஸ்வின் பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜானுடன் இணைந்து குட்டி பட்டாஸ் அல்பம் பாடலில் இணைந்து நடித்திருந்தார். யூடியூபில் வெளியான இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது .

வெங்கி இயக்கிய இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருந்தார். மேலும் இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில் குட்டி பட்டாஸ் பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து தங்களுக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |