Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட்டி யானையின் காலில் சிக்கி போராடிய வன ஊழியர்…. வைரலாகும் வீடியோ…. கோவையில் பரபரப்பு…!!

வன ஊழியரை குட்டி யானை காலால் மிதித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தீத்திபாளையம் கிராமத்திற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்தது. அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. ஆனால் குட்டி யானை மட்டும் வழிதவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பிளிறியபடி அங்கும் இங்கும் ஓடியது. இதனை பார்த்த வனத்துறையினர் அந்த குட்டி யானையையும் வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். அப்போது வன ஊழியர் நாகராஜன் என்பவரை குட்டி யானை கீழே தள்ளி காலால் மிதித்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் யானையின் காலடியில் சிக்கி தப்பிப்பதற்காக நாகராஜன் போராடியுள்ளார். இதில் படுகாயமடைந்த நாகராஜனை மற்றும் வன ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் குட்டி யானையின் காலடியில் சிக்கி நாகராஜன் போராடும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |