குட்டி ஸ்டோரி பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் மாஸ்டர் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது.
மேலும் மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இந்நிலையில் இந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடலான குட்டி ஸ்டோரி பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் லைக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.