இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரில் 61.53 விழுக்காடு பேர் குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.
கடந்த 24 மணிநேரத்தில் 16853 பேர் புற்று நோயிலிருந்து குணமடைந்து இருப்பதாக தன்னுடைய செய்தி குறிப்பிடுகிறது என்று இதுவரை 61.5 3 விழுக்காடு வேறு குணமடைந்து இருப்பதாக
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுவரையில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தற்போது வரை 2 லட்சத்து 64 ஆயிரத்து 944 பேர் இந்தியா முழுவதும் இருக்க கூடிய மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 16853 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதால் தற்போதைய நிலவரப்படி 61.53 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தன்னுடைய அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது