தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளுவதை பற்றி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுமக்கள் ஏழை_ எளியோக புதிதாக வீடு கட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டிடம் உள்ளிட்ட பணிகள் குறித்து எந்தவித சிரமமும் இல்லாமல் மேற்கொள்ள இன்றியமையாத கட்டுமான பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்கான புதிய எளிமையான வழிமுறைகளை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து மணல் விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து, ஆய்வு செய்து வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை செயல்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் ஏழை_ எளியோர் பயன்பெறும் வகையிலும் புதிய விதிமுறைகளை கடைப்பிடிப்பது மணல் விற்பனை செய்ய ஆணையிட்டுள்ளார். பொதுமக்களை ஏழை எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கும் விலையினை செலுத்தி எந்த சிரமும் இல்லாமல் மணல் எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பித்து பதிவு செய்த லாரி உரிமையாளர்கள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை மணல் இருப்பு பொருத்தப்பட்டுள்ளது தற்போது 16 லாரி குவாரிகள் மற்றும் இருபத்தி ஒரு மாட்டு வண்டிகள் இயக்குவதற்கு சுற்றுப்புற சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது முதற்கட்டமாக தற்போது உள்ள தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதலுடன் மணல் விற்பனை விளக்கப்பட்டுள்ளது அரசு மணல் கிடங்குகளில் கூடுதலாக செயல்பட உள்ள வங்கிகளில் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியை தற்போது நடைமுறையில் உள்ள இணையதள வங்கி கணக்கு ஏடிஎம் அட்டை மற்றும் மிகப்பெரிய ஆன்லைன் சேவைகள் வழியாகவும் பணம் செலுத்தும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.