Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்…! இனி இதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் தளர்வு…? மத்திய அரசு முடிவு…!!!

கொரோனா தொற்றின்  வேகம் குறைய தொடங்கியதன் காரணமாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  பாதிப்பினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று  குறைய தொடங்கியதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனோவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூகம், விளையாட்டு, மத, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கலந்து ஆலோசித்து  நீக்கி விடலாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் திருவிழா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க முடிவு எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Categories

Tech |