Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்….! இனி யார் வேண்டுமானாலும்….. அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மாற்றாக புதிய தளம்….!!!!

இந்தியாவில் இ-காமர்ஸ் துறையில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.  அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இத்தளங்கள் மூலம் விற்பனையாளர்கள் பல நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் இ-காமர்ஸ் துறையை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிதாக ஓஎன்டிசி என்ற கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் வழியே யார் வேண்டுமானாலும் தங்கள் சேவைகளை, தயாரிப்புகளை சந்தைப்படுத்த முடியும். திறந்தவெளி இ-காமர்ஸ் கட்டமைப்பான ஓஎன்டிசி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

Categories

Tech |