இன்று முதல் மூன்று வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது
கர்நாடகா மாநில கல்வித் துறை இன்று முதல் மூன்று வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நாட்களில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தசரா விடுமுறைகளை ரத்து செய்யப்போவதாக 10 தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மாநில அரசு மூன்று வார விடுமுறையை அறிவித்துள்ளது பல ஆசிரியர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதனால்தான் அக்டோபர் 12 முதல் 30 ஆம் தேதி வரை 3 வாரம் வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் தசரா வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.