Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்…. இளைஞர்களே வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி…..வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மார்ச் 26 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடக்க உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவினால் கடந்த 2 ஆண்டுகளாக படித்து முடித்த இளைஞர்கள், வேலை இல்லாமல் தவித்து வருகின்றன. இந்த நிலையில், சென்ற வருடம் இறுதியில் தமிழகத்தில் போடப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனவே தற்போது தான் தமிழகம் முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பி வருகிறது. இதையடுத்து அரசுத் தரப்பில் பல வேலை வாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இந்த ஆண்டு தொடக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளும், இதையடுத்து குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பும்  வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஒரு பக்கம் அரசு சார்பில் இவ்வாறு வேலைவாய்ப்புகள் அறிவித்து வருகின்றன. இதையடுத்து மறுபக்கம் தனியார் துறையின் சார்பில் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில், வருகின்ற மார்ச் 26ஆம் தேதி அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடக்க உள்ளதாக  அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த முகாமானது திண்டிவனத்தில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.

மேலும்பிரிவுகள் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்வதாகவும், மற்றும் 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான, பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆகவே இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ” www.tnprivatejobs.tn.gov.in” என்ற இணையதள முகவரியில், தங்களது கல்வித் தகுதி பற்றிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் கல்வி சான்றிதழ்கள், ஆதார் கார்டு மற்றும் சுயவிவரம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதை அடுத்து மேலும் கூடுதல் விவரங்களை பெற  04146-226417 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |