இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் 3 லட்சத்து 06 ஆயிரத்து064 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் கீழ் சென்று மக்களை நிம்மதி அடையவைத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது நேற்றைய பாதிப்பை விட 50,190 குறைவாகும்).
தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 614 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,67,4753 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா தொற்றுக்கு 22,36,842 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் தினசரி பாசிட்டிவிட்டி ரேட் 15.52% இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.