விஜய் டிவி சீரியல் நடிகை சமீரா செரீப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியலில் சில நடிகர், நடிகைகள் மாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த சீரியல் விரைவில் நிறைவடைந்தது. மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சமீரா.
இந்த சீரியலுக்கு பின் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடித்து வந்தார். இதையடுத்து நடிகை சமீரா தனது நீண்டநாள் காதலரும் நடிகருமான அன்வர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை சமீரா கர்ப்பமாக இருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.