வரும் டிசம்பர் மாதத்திற்குள் 50,000 புதிய வேலைகளை சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளன.
கொரோனா நோய் தொற்றினால் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்த சாமானிய மக்கள் தங்களது சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் நம்பிக்கையூட்டும் செய்தியானது வெளி வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை சர்வதேச மற்றும் உள்நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பி எல் ஐ (புரொடக்சன் லிங்க்டு இன்சென்டிவ் ஸ்கீம்). இத்திட்டத்தின்கீழ் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளன.
இத்திட்டத்தின்கீழ் உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மானியம் வழங்கும் என்ற அறிவிப்பானது கடந்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளிவந்தது. சர்வதேச நிறுவனமான சாம்சங், லாவா மற்றும் டிக் சான் போன்ற நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் வருங்காலத்தில் உலகத் தரத்திலான எலக்ட்ரானிக் பொருட்கள் நமது இந்திய நாட்டில் இந்திய மக்களால் உருவாவதன் மூலம் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.