Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ்… தமிழகத்தில் இன்று மட்டும் 6,019 டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 6,019 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 68,444 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 35,81,939 ஆக இருக்கின்றது. இன்று புதிதாக 5,950 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,38,055 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,766 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல இன்று 6,019 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,78,270ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில்54,019 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று ஒரேநாளில் பாதிக்கப்பட்டவர்களை விட  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளன.

Categories

Tech |