உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,585,152 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 13 ஆயிரத்து 913 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.57 லட்சத்து 95 ஆயிரத்து 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 42 லட்சத்து 76 ஆயிரத்து 230 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 57,788 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன.
நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 31 ஆயிரத்து 375 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதில் மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இதில் நேற்று மட்டும் பிரேசில் 32,578 பேரும்,அமெரிக்காவில் 26,157 பேரும்,இந்தியாவில் 12,565 பேரும், ரஷ்யாவில் 9,220 அதிகமானோரை குணப்படுத்தி அசத்தியுள்ளது.