நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியும் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்நிலையில் பிஎம் வாணி திட்டத்தின் கீழ் மக்களுக்கு இணையதள சேவையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி ரேஷன் கடைகளில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். இதை பயன்படுத்த விரும்புவோர் மொபைல் போன், லேப்டாப் எடுத்து வந்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் மூலம் ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.