தமிழகத்தில் இதுவரை 56,021பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 3095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்த 56,021 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57 % குணமடைந்தோர் வீதம் உள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கம். சிடி ஸ்கேன், மொபைல் எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் அடங்கிய மருத்துவமனை உருவாக்கம்.
அறிகுறி உள்ளவர்கள், இல்லாதவர்களையும் அரசு ஒரே விதத்தில் அணுகுகிறது . தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் உருவாக்கபட்டுள்ளது. அதிக பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 12 லட்சத்து 35 ஆயிரத்து 692 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.