காயமடைந்துள்ள பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார்..
இந்திய அணியின் முதுகெலும்பு பந்துவீச்சாளராக திகழ்பவர் தான் ஜஸ்பிரிட் பும்ரா.. இவர் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணி ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது.. அதேபோல நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) குணமடைந்து வருகின்றார்.
இந்நிலையில் பும்ரா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், ட்விட்டர் பக்கத்திலும் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.. அதில், பும்ரா ஓடி கைகால்களை அசைத்து நன்றாக பயிற்சி செய்கிறார்.. மேலும் “ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் எப்போதும் மதிப்புக்குரியது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
28 வயதான பும்ரா காயம் காரணமாக 2022 டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகிய நிலையில், இந்த வீடியோவுக்கு கீழ் குணமடைந்து மீண்டு வந்து இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
Never easy, but always worth it 💪 pic.twitter.com/aJhz7jCsxQ
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) November 25, 2022