Categories
மாநில செய்திகள்

குணமடைந்து வீடு திரும்பிய பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட சிறுமி…. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர்….!!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டையில் 6 வயது சிறுமி இசக்கியம்மாள் வசித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த வருடம் தெரியாமல் பிளீச்சிங் பவுடரை உட்கொண்டதால் உடல் மெலிந்து மிகவும் பாதிப்படைந்து காணப்பட்டார். இச்சிறுமியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னைக்கு அழைத்து சிறப்பு சிகிச்சையளிக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்கு பின் சிறுமி இசக்கியம்மாள் குணமடைந்து சென்ற சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

இந்நிலையில் இன்று தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் செங்கோட்டையிலுள்ள சிறுமி இசக்கியம்மாள் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது சிறுமி இசக்கியம்மாள் ஓடிவந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் மடியில் அமர்ந்து பேசியது அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |