Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி காந்தி  நகரில் அந்தோணி, ஜெயக்குமார் என்ற வாலிபர்கள்  வசித்து வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் குற்ற செயல்களில் ஈடுபடும் அந்தோணி, ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என  மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார்.

அதன்படி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |