உடல் நல பருமன் பிரச்சனையால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று தேசிய குடும்ப நலத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் உடல் பருமானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 4 ஆண்டுகளில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19 % இருந்து 23 % ஆகவும் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 21 % இருந்து 24 % ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கேரளா, அந்தமான், ஆந்திரா, கோவா, சிக்கிம், மணிப்பூர், டில்லி, தமிழகம், புதுச்சேரி, பஞ்சாப், சண்டிகர் மற்றும் லட்சத்தீவில் உடல் பருமன் பிரச்சனையால், 3 ல் ஒரு பங்குக்கு மேலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தேசிய அளவில், பெண்கள் கருவுறுதல் விகிதமானது 2.2 % இருந்து 2% ஆகவும் குறைந்துள்ளது. மேலும் அதிகபட்சமாக கருவுதல் விகதம் பீஹாரில் 2.98 சதவீதமாகவும், மேகாலாயாவில் 2.91 சதவீதமாகவும், உ.பி.,யில் 2.35 சதவீதமாகவும், ஜார்கண்ட்டில் 2.26 சதவீதமாகவும் மற்றும் மணிப்பூரில் 2.17 சதவீதமாகவும் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.