உடுமலை மத்திய பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக உள்ளதால் சரி செய்ய வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை நகராட்சி பேருந்து நிலையத்தில் தினசரி ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்திற்குள் ஓடுதளம் ஆங்காங்கு சேதம் அடைந்துள்ளது. வேறு வழி இல்லாமல் பேருந்துகளை சேதமடைந்த பகுதியில் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஓடுதளத்தில் பேருந்தை இயக்கும் பொழுது அடிக்கடி பழுதாகி வருகிறது. மேலும் பயணிகள் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக அவசர அவசரமாக செல்லும் பொழுது கீழே தடுக்கிவிழுந்து விபத்துக்குள்ளாகிறார்கள். ஆகையால் மத்திய பேருந்து நிலையத்தில் குண்டும் குழியுமாக இருக்கும் ஓடுதளத்தை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என பயணிகளும் பேருந்து டிரைவ்ர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.