Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான சாலை…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டகோரிக்கை…!!

கனமழையினால் பழுதடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் ஊசிமலை, முடீஸ், பெரியகல்லார், வெள்ளைமலை, மானாம்பள்ளி, சேக்கல்முடி போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளிலுள்ள சாலைகள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பழுதடைந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

இந்நிலையில் வால்பாறையிலுள்ள சாலைகள் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியில்லாத நிலையில் இருப்பினும் மக்களின் நலன் கருதி அரசு பேருந்துகள் அவ்வழியாக இயக்கப்படுகின்றன. இந்த பழுதடைந்த சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் அவற்றின் சக்கரங்கள் தேய்ந்துவிடுகிறது. மேலும் வால்பாறையிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் நடைபாதைகள் குண்டும் குழியுமாக கிடைக்கிறது. காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் போதுமான இடவசதி இல்லை. நகராட்சி சார்பில் தொடங்கப்பட்ட வணிக வளாக பணிகள் பாதியிலேயே நிற்கிறது.

இதுபோன்று பல படிகள் முழுவதும் முடிவடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் பாதியிலேயே கிடைக்கிறது. எனவே வால்பாறை பகுதியிலுள்ள தார் சாலைகளை சீரமைப்பதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |