Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான சாலை…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி சாலைகள் குண்டும் குழியுமான இருப்பதால் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்கராசு என்பவர் 1 வயது குழந்தையுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையிலிருந்த பள்ளத்தை பார்க்காமல் அவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றதால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் குழந்தை நீரில் மூழ்கியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர்.

மேலும் கீழே விழுந்ததில் தங்கராசுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் குழந்தையுடன் தங்கராசு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபோன்று ராஜேஷ், பெருமாள், குணசேகரன் ஆகிய 3 பேரும் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனத்தை ஓட்டி சென்றதால் கீழே விழுந்தனர். அவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே கறம்பக்குடி சாலையிலுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |