Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான சாலை…. விபத்துகள் ஏற்படும் அபாயம்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு…!!

குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்திலிருந்து திருநாவுக்கரசுநல்லூர் செல்லும் வழியில் தார்சாலை அமைக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த தார்சாலை கடந்த 5 வருடங்களாக பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது.

இதனை மேம்படுத்த கோரி பலமுறை பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Categories

Tech |