Categories
தேசிய செய்திகள்

குண்டும் குழியுமான ரோட்டில் போட்டோசூட்….. அரசுக்கு மணப்பெண் சூசகம்….!!!!

நிலம்பூர் அருகே சாலையை சரியாக சீரமைக்க கோரி குண்டும்குழியான சாலையில் நின்று மணப்பெண் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கேரள மாநிலம் நிலம்பூர் அருகே உள்ள பூக்கோட்டு பாலம் என்ற பகுதியில் வசிப்பவர் ஸீஜீஷா. இவருக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் மண்டபத்திற்கு இவர் காரில் சென்ற போது ரோட்டில் ஏகப்பட்ட குண்டு குழிகள் இருந்தது. இதை பார்த்த மணப்பெண் காரை விட்டு இறங்கி குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அந்த சாலையில் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். பின்னர் மண்டபத்திற்கு சென்று மணப்பெண் திருமணம் செய்து கொண்டார். குண்டும் குழியுமான சாலையில் நின்று புகைப்படத்தை எடுத்த மணப்பெண் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |