தேவாலயத்தில் திருட வந்தவர்கள் விலை உயர்ந்த பொருட்களை விற்றுவிட்டு சடலத்தின் பாகத்தை எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜெர்மனியில் உள்ள தேவாலயத்தில் குண்டு துளைக்க முடியாத கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திருடு போயுள்ளது. அந்த தேவாலயத்தில் புனிதர் Wolfgang உடல் புதைக்கப்பட்டிருந்தது. திருடர்கள் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் திருடாமல் அந்தப் புனிதரின் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்தப் புனிதரின் உடல் பாகங்கள் ஆஸ்திரியா, போர்ச்சுக்கல் போன்ற பல நாடுகளில் இருக்கும் தேவாலயங்களில் புதைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வகையில் ஜெர்மனியில் புதைக்கப்பட்ட உடல் பாகத்தை அவர்கள் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தால் காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.