அமெரிக்காவில் வாகனம் ஒன்று தீடிரென வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள Tennissee என்ற மாநிலத்தில் உள்ள நஷ்வில்லே என்ற நகரில் வாகனம் ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளது. இதுகுறித்து தலைமை அதிகாரியான ஜான் டிரேக் கூறியுள்ளதாவது, தொலைபேசியில் துப்பாக்கிச் சூடு குறித்து பதிலளித்து கொண்டிருந்தபோது கேளிக்கை வாகனத்தை போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் குண்டு வெடிப்பதற்கு முன்பே 15 நிமிடங்கள் கழித்து குண்டு வெடிக்கப் போவதாக ஆடியோ பதிவு செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வாகனம் வெடித்துச் சிதறும் போது அப்பகுதியில் உள்ள வீடுகளும் சேதமடைந்துள்ளன.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், இது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவத்தின் போது யாரும் வாகனத்தில் இருந்தார்களா என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர். இதற்கிடையில் குண்டுவெடித்த பகுதியில் மனித உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குண்டு வெடிப்பில் சிக்கிய மனிதர்களின் உடல் பாகங்களாக இருக்கலாம் என்பதை விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.