மும்பை மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையில் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 5000 பரிசு வழங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோட்டல்களில் உணவு வாங்கி வந்து வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் வேலையை ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகிறது. அதில் பணியாற்றும் ஊழியர்கள் இருசக்கர வாகனங்களின் வந்து பணியை செய்கின்றனர்.
இந்நிலையில் மும்பயி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவர் கனமழைக்கிடையே முதுகில் உணவு டெலிவரி பையுடன் குதிரையில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்கள் வேகமாக பரவி வருகிறது அந்த வீடியோவில் அந்த ஊழியரின் முகம் தெரியவில்லை.
இந்த வீடியோ அந்த நிறுவனத்திற்கு விளம்பரத்தையும் நல்ல பெயரையும் ஏற்படுத்தியுள்ளது. கனமழை நடுவிலும் பணியாற்றி அந்த ஊழியரை பாராட்டுவதற்கு ஸ்விக்கி நிறுவனம் விரும்பியது. எனவே குதிரையில் சென்ற அந்த ஊழியர் யார் என்பது குறித்து சமூக வலைதளம் வாயிலாக முதலில் தெரிபவருக்கு 5000 ரூபாய் பரிசளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.