நகரமயமாதலுக்கு ஏற்ப மக்களின் தேவைகளை அன்றாட அதிகரித்து வருகிறது. அதிலும் போக்குவரத்து சார்ந்த தேவைகளுக்கும் எந்த குறையும் இருப்பதில்லை. நட பயணமாக சென்ற நிலையில் இருந்து தற்போது ஒருவர் செல்வதற்கு காரை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வருகின்றனர். ஆனால் ஒரு சிறுவன் பள்ளிக்கு குதிரையில் செல்வது மக்களை வியக்க வைக்கிறது.
மத்தியபிரதேசம் மாநிலம் பாலகோட் மாவட்டத்தில் ஒரு சிறுவன் தினமும் பள்ளிக்கு குதிரையில் சென்று வருகிறான். இது குறித்து அந்த சிறுவன் கூறியது, பள்ளிக்கு செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை மோசமாக உள்ளது. அதனால் தினமும் குதிரையில் வந்து செல்கிறேன். அதுமட்டுமில்லாமல் படிப்பின் மீதான ஆர்வம் காரணமாகவும் குதிரையில் சீக்கிரமாக பள்ளிக்கு செல்கிறேன் என்று அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.