குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற 10 குதிரை வண்டியின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானகிரி கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் குதிரை வண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று அங்குள்ள மானகிரி-நாச்சியார்புரம் சாலையில் குதிரை பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 13-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர்.
இதனையடுத்து பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் மூர்த்தி, அய்யனார், செல்வம், மணி ஆகியோர்களும், சின்ன வண்டி பந்தயத்தில் ஜாஜகான், லாரன்ஸ், அப்பாஸ் ராவுத்தர் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற 10 குதிரை வண்டியின் உரிமையாளர்களுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது