செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அண்ணா திமுகவில் நடப்பது எதிர்பார்த்தது தான். அண்ணா திமுக என்ற பேரியக்கத்தை, ஒன்றை கோடி தொண்டர்கள் இருந்த இயக்கத்தை, கோடிக்கணக்கான விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கை பெற்ற இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி இன்றைக்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு எடுத்து இருக்கிறார். அவர் குத்தகைக்கு எடுப்பதற்கு டெல்லியில் இருக்கின்ற எஜமானர்கள் அனுமதித்திருக்கிறார்கள். ஏற்கனவே கொம்பு சீவி விட்ட பன்னீர்செல்வம் டெல்லி சென்றபோது,
ஜனாதிபதி வேட்பாளரை வேட்புமனு தாக்கல் செய்கிற இடத்தில் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, இரண்டு பேரையும் கொம்பு சீவி அண்ணா திமுக என்கிற கட்சியை உடைக்கப் போகிறார்கள், உருகுலைக்க போகின்றார்கள். அந்த கட்சி உருமாறப்போகிறது. பிஜேபி என்கிற கட்சி மாநில கட்சிகள் எதையும் வாழ விட்டதாக வரலாறு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி அதற்கு இன்றைக்கு பலியாகி இருக்கிறார். 10 ஆண்டுகால ஆட்சியில் பல்லாயிரம் கோடி… இன்னும் 5 பொதுத் தேர்தலை சந்திக்கின்ற அளவுக்கு அவர் பணத்தை கொள்ளையடித்து வைத்திருக்கின்றார்.
இன்றைக்கு அந்த பணத்தை வைத்துக்கொண்டு, அண்ணா திமுகவில் அப்பாவியாக இருக்கின்ற பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஒரு ஜனநாயகத்தில் இதுவரை நடக்காத ஒரு காட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அன்றைக்கு பொதுக்குழு நடந்ததென்றால் உயர்நீதிமன்ற உத்தரவு. அந்த பொதுக்குழுவில் அசம்பாவிதம் நடக்கவில்லை என்றால் 2000 போலீசை பாதுகாப்புக்கு அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின் காரணம்.
ஆகவே அண்ணா திமுக அழியப்போகிறது. அதை காப்பாற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமியால் முடியாது. பன்னீர் செல்வத்தாலும் முடியாது. இரட்டை இலையை முடக்குவது தான் பிஜேபி கட்சியின் இலட்சியம். இரட்டை இலையை முடக்கினால் அந்த இடத்தில் தாங்கள் வந்து இருந்து கொள்ளலாம் என்று கருதிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எந்த சூழலிலும் பிஜேபி என்ற கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது, அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.