இந்தியாவின் அனைத்து சொத்துக்களையும் மத்திய பாஜக அரசு விற்றுவிட்டது. அரசு சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்து வைத்த சொத்துக்களை 7 ஆண்டுகளில் மத்திய அரசு மொத்தமாக விற்று விட்டது என்றும் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு தேசிய பணமாக்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 6 லட்சம் கோடி நிதி திரட்ட நாட்டின் முக்கியமான சொத்துக்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சொத்துக்கள் எதுவும் விற்க்கப்படவில்லை. குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே குத்தகைக்கு விடப்படுகின்றன என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த நிதி நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படும் என்றும் கூறியுள்ளது.