ரகுல் பிரீத்சிங்க் இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாதிரியாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார். இவர் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ இணையதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் எனக்கு தற்போது மிகவும் பிடித்த பாடல் பசோரி (பாகிஸ்தான் பாடல்) என குறிப்பிட்டு கருப்பு உடையில் மிகவும் கவர்ச்சியான தன்னுடைய நடனத்தால் பார்க்கும் ரசிகர்களை கிரங்க வைக்கிறார்.