பிக்பாஸ் ஷிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளதில் வைரலாகிறது.
விஜய் டிவியில் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி. மேலும் இவர் பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் நின்றவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். தற்போது கோலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அவர் கமலஹாசன் அவர்களுடன் விக்ரம் என்ற படம், ஆர்.ஜே பாலாஜி உடன் ஒரு படம், வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் என தொடர்ந்து பல முன்னணி கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மேலும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். இவரை பின்தொடர்வோர் ஏராளமானோர். இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வார். தற்போது ரசிகர்களை கவரும் வகையில் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.